இந்த நிகழ்ச்சித்திட்டம் என்றால் என்ன?
வாகனத்தில் இருந்து வெளியேறுபவைகளை வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் உள்ளனவா என்பதைப் பரிசோதித்து உறுதிப்படுத்துவதற்காக இந் நிகழ்ச்சித்திட்டம் ஊடாக செய்யப்படுகிறது.
வாகன வெளியேற்றுகை புகை பரிசோதிப்பிற்கான ஆவணங்கள் மற்றும் ஏனைய தேவைப்பாடுகள்
- வாகன சான்றுப்பத்திரம் கொடுக்கப்பட வேண்டும்.
- இலகுவாக வாசிப்பதற்காக இயந்திரத்தின் இலக்கம் மற்றும் அடிச்சட்டக இலக்கம் துப்பரவு செய்யப்பட வேண்டும்.
- பரீட்சிப்பிற்காக கொடுக்கப்படும்பொழுது வாகனத்தின் இயந்திரத்தின் ஓடும் வெப்பநிலையில் இருக்க வேண்டியிருப்பதனால் இயந்திரமானது ஆகக் குறைந்தது 10 நிமிடங்களாவது செயற்படுத்தல் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- எண்ணெய் மற்றும் வெளியேற்ற வாயுக்கசிவு உடைய வாகனங்கள் பரீட்சிப்பிற்கு உட்படுத்த மாட்டாது.
- வாகனமானது நீர்க்கசிவுகள் அற்றதாகவும் இயந்திரம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
- பரீட்சிப்பு தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யாத நிலையில் பரீட்சிப்புக்கு உட்படும் வாகனமானது பரீட்சிப்பின்பொழுது ஏதாவது செயலற்றுப் போகும் பட்சத்தில் அதனால் ஏற்படும் இழப்புக்களை வாகன சொந்தக் காரரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
வாகன கழிவு வெளியேற்றல் பரீட்சிப்பு செயன்முறை
வாகனத்தின் வகை கழிவு வெளியேற்ற நியமங்கள்
பெற்றோல் வாகனங்கள் | |||
வாகனங்கள் | கழிவு வெளியேற்ற நியமங்கள் | ஏனைய விடயங்கள் | |
2008 - 01 ஏப்பிரலில் இருந்து செயற்படுத்தப்படுபவை | |||
காபன் மொனோ ஒக்சைட் CO (% v/v) |
கையிற்றோ காபன் HC (ppm v/v) |
||
மோட்டார் சைக்கிள்கள் தவிர்ந்த பெற்றோல் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் |
4.5 | 1200 | இயக்கியது, ஓடவில்லை சுமையில்லாமல் 2500 RPM உடன் |
பெற்றோல் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெற்றோல் மோட்டார் முச்சக்கர வண்டிகள் |
6 | 9000 |
சுருக்கக் குறிப்புக்கள்
% v/v - தொகுதிக்கான நூற்றுவீதம்
ppm v/v - தொகுதிக்கான வகையில் மில்லியனுக்கான பகுதிகள்
RPM - நிமிடத்திற்கான சுழற்சிகள்
டீசல் வாகனங்கள் | |
---|---|
வாகனங்களின் வகை | கழிவு வெளியேற்றல் நியமங்கள் |
உடனடியாக அதிவேகப்படுத்துகையில் புகையின் இயலுமை K காரணி (M-1) 2008 ஏப்ரல் 01 இலிருந்து அமுலுக்கு வரும் வரையில் |
|
டீசல் வாகனங்கள் | 8.0 |
சுருக்க விளக்கக் குறிப்புக்கள் -
K - காரணி - உறிஞ்சுபவர் இணை வினைத் திறனானவர்
உடனடி வேகப்படுத்துகை - ‘SAE 1667 நடைமுறை சிபார்சு செய்யப்படுகிறது. இவ் வசனத்தின் பொருள்கோடலில் அதே கருத்தைக் காட்டுகிறது.
உரிய கட்டணங்களும் கொடுப்பனவு செலுத்தும் முறையும்
வாகன கழிவு வெளியேற்றல் பரீட்சிப்பை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு தேவையான பரீட்சிப்பு கட்டணம் செலுத்தப்பட வேண்டும். (இப் பரீட்சிப்பு தொடர்பான உரிய கட்டணங்கள் வரிகள் இங்கே தரப்படுகின்றன).
வாகனத்தின் வகை | கட்டணங்கள் (வற்உடன்) |
மோட்டார் சைக்கிள் (பெற்றோல்) | 415 |
மோட்டார் சைக்கிள் (டீசல்) | 415 |
முச்சக்கர வண்டி (பெற்றோல்) | 505 |
முச்சக்கர வண்டி (டீசல்) | 505 |
மோட்டார் கார் (பெற்றோல்) | 1110 |
மோட்டார் கார் (டீசல்) | 1110 |
இரு நோக்கத்திற்கான வாகனங்கள் / வான் (பெற்றோல்) | 1200 |
இரு நோக்கத்திற்கான வாகனங்கள் (டீசல்) | 1200 |
மோட்டார் லொறி (பெற்றோல்) | 1560 |
மோட்டார் லொறி (டீசல்) | 1560 |
மோட்டார் வண்டி (பெற்றோல்) | 1020 |
மோட்டார் வண்டி (டீசல்) | 1020 |
பஸ் (பெற்றோல்) | 1010 |
பஸ்(டீசல்) | 1010 |
பிறைம் மூவர் (டீசல்) | 1660 |
பரீட்சிப்பு மையங்களும் அவைகளின் அமைவிடமும்
- Laugh Eco Sri அல்லது Klenco Lanka என்பவற்றின் ஊடாக தேவையான பரீட்சிப்புக்கள் மேற்கொள்ளப்படக்கூடும். இந் நிலையங்கள் மற்றும் அமைவிடங்களை அறிவதற்கு இவற்றின் இணையத்தளங்களை அணுகவும்.
ஏனைய தொடர்புடைய சேவைகள்
வாகன கழிவு புகை வெளியேற்றல் சான்றிதழை பெற்றுக்கொள்ளுதல் முறைமையும் மற்றும் பரீட்சித்தல் முறைகள்
- 01.02. 2011 இலிருந்து அமுலுக்கு வரும் வரையில் முதலாம் வருடத்திற்கு மாத்திரம், எல்லாப் புதிய வாகனங்களுக்கும் இரண்டாம் வருடத்திற்காக வருமானவரி அனுமதிப்பத்திரம் பெறும்பொழுது வாகனங்களின் கழிவு வெளியேற்றல் சான்றிதழ் கட்டாயமானதாக உள்ளது.
- 1975.12.31 ஆம் ஆண்டு முன்பாக உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் வாகன கழிவு வெளியேற்றல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
- வருமானவரி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வாகன புகை கழிவு போக்கும் சான்றுப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதானது மறுசீரமைக்கப்பட்ட வாகனங்களைப் பொறுத்தளவில் முதலாவது ஆண்டிலிருந்து தேவைப்படுத்தப்படுகின்றது.
- வருமானவரி அனுமதிப்பத்திரத்தை வழங்குவது தொடர்பில் எல்லா விவசாயக் காணி வாகனங்களும் வாகன கழிவு போக்கல் சான்றுப்பத்திரங்களை வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது..
- நான்கு சக்கர உழவு இயந்திரங்களும் கை உழவியந்திரங்களும் விவசாயக்காணி இயந்திரங்களாகக் கருதப்படுகின்றது.
- திரவ பெற்றோலிய வாயுவைப் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களானவை மோட்டார் வாகனங்களாகவே வரைவிலக்கணம் செய்யப்பட்டு அவைகளும் அவ் வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதில் வாகன கழிவுப்போக்கல் சான்றுப்பத்திரத்தை பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் திரவப் பெற்றோலிய வாயுவைப் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களும் மற்றும் பெற்றோல் (இரட்டை எரிபொருள் வாகனங்களும்) வருமான வரி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த விடயத்தில் பெற்றோல் பயன்படுத்தும் விடயத்தில் வாகன கழிவு வெளியகற்றல் சான்றுப்பத்திரம் பரிசோதிக்கப்பட வேண்டும். திரவ பெற்றோல் வாயுவைப் பயன்படுத்தி ஓடும் வாகனங்களும், மோட்டார் வாகனங்களாக வரையறுக்கப்பட்டுள்ளதால் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் அந்த வாகனங்களும் மோட்டார் வாகனங்கள் என வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளபடியால் பெற்றோல் வாகனங்கள் மீதான அதே கட்டணங்களை அறவிட்டு அவற்றுக்கும் வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
- வாகனத்தின் இயந்திரம் திருத்தப்பட்டுள்ளதாக வாகனத்தின் உரிமையாளர் உறுதிப்படுத்தும் பட்சத்தில் வருடாந்த வருமானவரிப் பத்திரத்திற்கான கட்டணத்தை அறவிடுவதற்காக ஒரு பற்றுச்சீட்டு வழங்கப்படும். அதன் மூலம் வாகனத்தின் மைல் மானியில் காட்டப்பட்ட கிலோமீற்றர் எண்ணிக்கைக்கு முன்பதாக 2000 கிலோமீற்றர்களை பூர்த்தி செய்யும் நிலை வரைக்கும் வாகனமானது ஓட்டக்கூடியதாக இருக்கும். அல்லது இயந்திரத் திருத்த திகதியிலிருந்து இரண்டு மாதம் முன்னோக்கிய திகதி வரை எது முதலில் வருகிறதோ அது வரை செலுத்தக்கூடியதாக இருக்கும். இந்நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் வாகனத்தின் சொந்தக்காரர் வாகன கழிவகற்றல் சான்றுப்பத்திரத்தைக் கொடுப்பதன் மூலம் வருமானவரி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
- மின் வாகனங்கள் மற்றும் இரட்டைச் சக்தி வாகனங்களுக்கான வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்குவது என்பது அவைகளுக்கு வாகன கழிவகற்றல் சான்றுப்பத்திரம் வழங்கும் தேவைப்பாட்டில் விலக்களிக்கப்படுகிறது.
- ஒரு வாகன கழிவகற்றல் சான்றுப்பத்திரத்தில் இருந்து ஒரு வருமானவரி அனுமதிப்பத்திரம் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வாயு வளங்கள் முகாமைத்துவ நிலையம் மற்றும் நியமங்கள் அளவிடல் திணைக்களம், என்பனவே இந்த வாகன கழிவகற்றலைக் கண்காணிப்புச் செய்கிறது. இந் நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாக ஏதாவது பிரச்சினை இருந்தால் மோட்டார்வாகன திணைக்களத்தின் வாகன கழிவுப்போக்கல் நிகழ்ச்சித்திட்ட அலுவலகத்துடன் நீங்கள் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்படுகிறீர்கள். அல்லது தொழில்நுட்ப பிரிவில் +94 113 100 152 அல்லது +94 112 692 275 தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும். அவையே இவற்றைக் கண்காணித்துக் கொள்கின்றது.