• இதன் கீழ் இலகு ரக வாகன வகுப்புக்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும்.
  • ஆகக் குறைந்தது அடுத்துவரும் 06 மாதங்களுக்கேனும் செல்லுபடியானதாக உள்ள வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரம்.
  • விண்ணப்பதாரர் வெளிநாட்டவராயின் ஆகக் குறைந்தது ஒரு மாதகாலப் பகுதிக்கான வீசா அனுமதிப் பத்திரம்.
  • சாரதி அனுமதிப் பத்திரமும், வெளிநாட்டு கடவுச் சீட்டும் ஆங்கில மொழியில் இல்லாத பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு.
  • இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஒருவரிடமிருந்து எம்.ரீ.ஐ. 31 ஆம் இலக்க மாதிரிப் படிவத்தில் 06 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட தகுதிகாண் மருத்துவ சான்றிதழ்.
  • வெளிநாட்டு தூதுவர் சேவைக்கு உரித்தான ஒருவராயின் அதனை உறுதி செய்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்படுகின்ற கடிதம்.
  • இலங்கையர் அல்லது இருவழிப் பிரசையாயின் தேசிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட செல்லுபடியான கடவுச் சீட்டை சமர்ப்பித்தல் வேண்டும்.