ஒருங்கிணைக்கப்பட்ட மோட்டார் வாகன (சாரதி உரிம அறவீடு) ஒழுங்குவிதிகள் (2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஒழுங்குவிதிகள் மற்றும் 2025 நவெம்பர் 17 வரையிலான திருத்தங்கள் உள்ளடங்கலாக)

ஒழுங்குவிதிகள்

  1. இவ் ஒழுங்கு விதிகள் "2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி உரிம அறவீடு) ஒழுங்குவிதிகள் என எடுத்துக்காட்டப்படலாம்.
  2. சாதாரண சேவை மற்றும் ஒரே நாள் சேவை தொடர்பான இவ்வொழுங்குவிதிகளுக்கான அட்டவணை I இன் நிரல் 1 இல் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக செலுத்தப்படற்பாலதான அறவீடானது, அவ்வட்டவணையின் நிரல் II மற்றும் நிரல் III இலுள்ள நேரொத்த பதிவுகளில் குறித்துரைக்கப்பட்டவாறிருத்தல் வேண்டும்.
  3. இவ்வொழுங்குவிதிகளுககான அட்டவணை II இன் நிரல் I இல் குறித்துரைக்கப்பட்ட இணையவழி சேவைக்காக செலுத்தப்படற்பாலதான அறவீடானது, அவ்வட்டவணையின் நிரல் II இலுள்ள நேரொத்த பதிவுகளில் குறித்துரைக்கப்பட்டவாறிருத்தல் வேண்டும்.
  4. 2009 ஆம் ஆண்டின் மாச்சு மாதம் 27 ஆந் திகதிய 1594/27 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சாரதி உரிம (அறிவீடு) ஒழுங்குவிதிகளானவை இத்தால் இல்லாது ஒழிக்கப்படுகின்றன.

 

அட்டவணை I சாதாரண சேவை மற்றும் ஒரே நாள் சேவைக்கான அறவீடுகள்

 

நிரல் I (வழங்கீட்டின் நோக்கம்)

நிரல் II (சாதாரண சேவை அறவீடு - ரூபா)

நிரல் III (ஒரே நாள் சேவை அறவீடு - ரூபா)

1. பழகுநர் அனுமதிப்பத்திரம் மற்றும் புதிய சாரதி உரிமமொன்றுக்கான விண்ணப்பப் படிவம் -

   

(அ) ஒரு வகுப்பிற்கு;

2500.00

3500.00

(ஆ) ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கு:

3000.00

4000.00

(இ) ஒரே நேரத்தில் மூன்று வகுப்புகளுக்கு;

3500.00

4500.00

2. சாரதி உரிமத்திற்கான எழுத்துமூலப் பரீட்சைக்கு மீள விண்ணப்பித்தல்

500.00

-

3. ஒரு சோடி "L பலசைகளுக்கு" விண்ணப்பித்தல்

   

(அ) 11" x 9" அளவினையுடைய

1000.00

1000.00

(ஆ) 5" x 4" அளவினையுடைய

500.00

500.00

4. சாரதி உரிமத்திற்கான செயன்முறைப் பரீட்சைக்கு மீள விண்ணப்பித்தல்

1000.00

-

5. உளதாம் சாரதி உரிமத்தில் புதிய வாகனங்களின் வகுப்புக்களைச் சேர்த்தல்

   

(அ) ஒரு வகுப்பிற்கு;

2500.00

3500.00

(ஆ) ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கு;

3000.00

4000.00

(இ) ஒரே நேரத்தில் மூன்று வகுப்புகளுக்கு;

3500.00

4500.00

6. சாரதி உரிமம் ஒன்றைப் புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலப்பகுதியை நீடித்தல்

   

(அ) ஒரு காலப்பகுதிக்கு:

2800.00

4000.00

(ஆ) காலாவதியான ஒரு ஆண்டிற்கு அல்லது ஒரு ஆண்டிற்கும் குறைவான காலப்பகுதியொன்றுக்கு மேலதிக அறவீடு;

500.00

-

7.

   

(அ) உளதாம் செல்லுபடியாகும் காலத்துக்காக சாரதி உரிமமொன்றின் இணைப்பிரதி யொன்றினை வழங்குதல்

2800.00

4000.00

(ஆ) சாரதி உரிமத்தின் இழப்பு காரணமாக உளதாம் செல்லுபடியாகும் காலத்துக்கென சாரதி உரிமமொன்றின் இணைப்பிரதி யொன்றினை வழங்குதல்

7800.00

9000.00

(இ) காலாவதியான ஒரு ஆண்டிற்கு அல்லது ஒரு ஆண்டிற்கும்குறைவான காலப்பகுதியொன்றுக்கு மேலதிக அறவீடு

500.00

-

8. வாகன உரிமமொன்றின் பிரித்தெடுக்கப்பட்ட பகுதியொன்றை வழங்குதல்

1000.00

-

9. சாரதி உரிமமொன்றின் விபரங்களை மாற்றுதல்

3300.00

4500.00

10. நிரல் I மற்றும் நிரல் II இலுள்ள நேரொத்த பதிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட அறவீட்டுக்கு மேலதிகமாக, மேலே இந்நிரலின் 5, 6 மற்றும் 7 இன் விடயங்களில் குறிப்பீடு செய்யப்பட்டவாறாக

(அ) உளதாம் சாரதி உரிமத்திற்கு புதிய வாகனங்களின் வகுப்புக்களைச் செர்த்தல்;

(ஆ) சாரதி உரிமத்தின் வலிதான காலப்பகுதியைப் புதுப்பித்தல் அல்லது நீடித்தல்; அல்லது

(இ) சாரதி உரிமமொன்றின் இணைப்பிரதியொன்றை வழங்குதல்,

தொடர்பில் புதிய சாரதி உரிமமொன்றை வழங்கும் நேரத்தில் சாரதி உரிமமொன்றின் விபரங்களை மாற்றுதல்.

500.00

500.00

11. உளதாம் சாரதி உரிமத்திலிருந்து புதிய சாரதி உரிமத்திற்கு மாற்றுதல்;

2800.00

4000.00

12.

   

(அ) இலங்கைக்கு வெளியில் வழங்கப்பட்ட சாரதி உரிமமொன்றை அல்லது அதற்குச் சமமானவொன்றை வைத்திருக்கின்றவரான இலங்கைப் பிரசை ஒருவருக்கு சாரதி உரிமமொன்றை வழங்குதல்

30,000.00

30,000.00

(ஆ) இலங்கைக்கு வெளியில் வழங்கப்பட்ட சாரதி உரிமமொன்றை அல்லது அதற்குச் சமமானவொன்றை இலங்கைப் பிரசையல்லாத ஆளொருவருக்கு சாரதி உரிமமொன்றை வழங்குதல்

60,000.00

60,000.00

13.

   

(அ) இலங்கைப் பிரசையல்லாத ஆளொருவருக்கு சாரதி உரிமமொன்றினை வழங்குதல்

45,000.00

45,000.00

(ஆ) இலங்கை பிரசையல்லாத ஆளொருவருக்கு வழங்கப்பட்ட சாரதி உரிமமொன்றினை புதுப்பித்தல்

15,000.00

15,000.00

(இ) தனது சாரதி உரிமம் அழிவடைந்த, திரிபடைந்த அல்லது சேதமடைந்த இலங்கைப் பிரசையல்லாத ஆளொருவருக்கு சாரதி உரிமமொன்றின் இணைப்பிரதியொன்றினை வழங்குதல்

15,000.00

15,000.00

(ஈ) தனது சாரதி உரிமத்தை இழந்த இலங்கைப் பிரசையல்லாத ஆளொருவருக்கு சாரதி உரிமமொன்றின் இணைப்பிரதியொன்றினை வழங்குதல்

30,000.00

30,000.00

14.

   

(அ) இலங்கைப் பிரசையல்லாத வருகை தருவோருக்கு சாரதி உரிமமொன்றினை வழங்குதல்

   

(i) ஒரு மாத காலப்பகுதிக்காக

15,000.00

15,000.00

(ii) ஒரு மாதத்திற்கு மேற்பட்ட மற்றும் இரண்டு மாதங்கள் வரையான காலப்பகுதியொன்றுக்கு

21,000.00

21,000.00

(iii) இரண்டு மாதங்களுக்கு மேற்பட்ட மற்றும் ஆறு மாதங்கள் வரையான காலப்பகுதியொன்றுக்கு

30,000.00

30,000.00

(iv) ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட மற்றும் பன்னிரெண்டு மாதங்கள் வரையான காலப்பகுதியொன்றுக்கு

45,000.00

45,000.00

(ஆ) இலங்கைப் பிரசையான வருகை தருவோருக்கு தற்காலிக சாரதி உரிமமொன்றினை வழங்குதல்

   

(i) மூன்று மாதங்கள் எனும் காலப்பகுதியொன்றுக்காக

15,000.00

15,000.00

(ii) மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட மற்றும் ஆறு மாதங்கள் வரையான காலப்பகுதியொன்றுக்கு

18,000.00

18,000.00

(iii) ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட மற்றும் பன்னிரெண்டு மாதங்கள் வரையான காலப்பகுதியொன்றுக்கு

24,000.00

24,000.00

15. சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரமொன்றினை வழங்குதல்

3000.00

3500.00

16. அஞ்சல் கட்டணங்கள் (பொதியிடுதல், விநியோகித்தல் மற்றும் கொரியர் கட்டணங்கள் உட்பட)

225.00

-

அட்டவணை II வெளிநாடுகளிலுள்ள இலங்கை சாரதி உரிமத்தை வைத்திருப்போருக்கான இணையவழி சேவைக்கான அறவீடுகள்

நிரல் I (இணையவழி சேவை)

நிரல் II (அறவீடு - USD)

இயையான இலங்கைத் தூதரகம் அல்லது உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக மின்னஞ்சல் மூலம் வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரசையொருவரினால் ஆக்கப்பட்ட விண்ணப்பமொன்றின்மீது, மோட்டார் வாகன திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சாரதி உரிமத்தின் விபரங்களை இணையவழி சரிபார்த்தல்.

25