இலங்கையில் வாகனப் பதிவூகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நோக்கில் 1916ஆம் ஆண்டு 14ஆம் இலக்க சட்டம் கொண்டு வரப்பட்டதுடன்இ அச்சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் மாஅதிபரின் கீழ் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. புpற்காலத்தில் 1925ஆம் ஆண்டு இது தொடர்பில் தாபிக்கப்பட்ட விசேட கமிட்டியின் சிபாரிசுகளுக்கமைய 1927ஆம் ஆண்டு 20ஆம் இலக்க மோட்டார் கார் கட்டளைச் சட்டம் சட்டமாக்கப்பட்டமை இன்னுமொரு மைல்கல்லாக காணப்பட்டது. இதனடிப்படையில் மோட்டார் வாகனம் மற்றும் சாரதிகளைபதிவூ செய்தல் மற்றும் வருடாந்த வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு முன்னர் வாடகைக் கார் மற்றும் லொறிகளைப் பரிசோததித்தல் என்பனவற்றை நோக்கமாகக் கொண்டதுடன்இ 1927ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ் 1928ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி மோட்டார் வாகன பதிவாளரின் கீழ் மோட்டார் வாகனப் பதிவாளர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் பயணத்தின் இன்னுமொரு மைல்கல் யாதெனில்இ 1951ஆம் ஆண்டு 14ஆம் இலக்க மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் இது ஒரு திணைக்களமாகத் தாபிக்கப்பட்டமையாகும். இலங்கையில் மோட்டார் வாகன பதிவூஇ ஒழுங்கமைப்புஇ சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்இ வீதிப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற விதத்திலான வாகனப் பயன்பாடு என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வினைத்திறனானதும் விளைதிறனானதுமான சேவைகளை வழங்குவதே எமது திணைக்களத்தின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது.

தற்காலத்தில் இலங்கையில் வாகனப் பயன்பாட்டின் துரித அதிகரிப்புக் காரணமாக இத்திணைக்களத்தின் பணிகள் விரிவடைந்துள்ளதுடன் திணைக்களத்தின் சேவைகளை தரமாகவூம் அளவூ ரீதியாகவூம் சிறப்பாகவூம் நிறைவேற்றும் வகையில் நாரஹேன்பிட்ட பிரதான அலுவலகத்தை மையமாகக் கொண்டு வேரஹெர அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் ஊடாகவூம் இத்திணைக்களத்தின் சேவைகள் திட்டமிடப்படுகின்றன. இதனடிப்படையில் தற்போது சில மாவட்ட அலுவலகங்களும் ஒன்லைன் ஊடாக தனது சேவைகளை வழங்கி வருகின்றது.

அனைத்து மாவட்ட அலுவலகங்களும் ஒன்லைன் ஊடாக நாரஹேன்பிட்ட பிரமஸ்ரீதான அலுவலகத்தின் ஊடாக தொடர்புபட்டுள்ளதான்இ கிராமிய ஃ பிரதேச மட்டத்தில் இருக்கும் சேவைபெறுநர்களது எதிர்பார்ப்புக்கள் ஃ தேவைப்பாடுகள் ஒடனடியாக நிறைவேறுதலும்இ நவீன வசதிகள் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் ஊடாக சேவைபெறுநர்களது எதிர்பார்ப்புக்களை இலகுபடுத்துவதும் இத்திணைக்களத்தின் இடுத்த கட்ட பிரதான நோக்கமாக உள்ளது.